இந்தியா லைப் ஸ்டைல் சமூகம்

நீதிதான் வேண்டும்!! எங்களுக்கு நிதி உதவி வேண்டாம்; ஹரியானா மாணவியின் தாய் பரபரப்பு பேச்சு

Summary:

hariyana students mother refused amount from govt

மூன்று நாட்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்ற 19 19 வயது மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண். வழக்கம்போல் சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த மாணவியை மூன்று நபர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். பின்னர் ஒரு பயலுக்கும் கூட்டிச் சென்று அந்த பெண்ணை 3 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேறு சிலரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

அரியானா கற்பழிப்பு விவகாரம்; இழப்பீடு வேண்டாம், குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்:  பெண்ணின் தாயார்

அந்த காம வெறி பிடித்த கும்பல் அந்த பெண் சுயநினைவை இழக்கும் வரை தொடர்ந்து கற்பழித்துள்ளனர். பின்னர் சுயநினைவு இழந்த பெண்ணை காரில் ஏற்றி வந்து அந்தப் பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஒன்றில் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த பெண்ணை கடத்திச் சென்ற மூன்று நபர்களும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று அந்தப் பெண் போலீசிடம் கூறியுள்ளார். முதலில் காவல்துறையினர் இந்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர். மேலும் தன்னை 8 முதல் 10 பேர் பாலியல் பலாத்காரம்  செய்து இருக்கலாம் என கூறி உள்ளார்.

இதில் பங்கஜ் என்ற முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் என தெரியவந்து உள்ளது.  மேலும் இந்த சம்பவத்தில் மணீஷ் மற்றும் நிஷ்ஷூ என்ற இரு வாலிபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 

சிபிஎஸ்சி தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடியின் கையால் விருது பெற்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் தாய் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் மாணவியின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க அதிகாரிகள் சென்றபோது, அதனை ஏற்க அவரின் தாய் மறுத்து விட்டார். 

ஹரியாணா மாநில அரசு அதிகாரிகள் அவரை சந்தித்து காசோலையை கொடுக்க வந்தபோது, அதனை ஏற்க மறுத்த அவர், ‘‘எனக்கு தேவை நிதி அல்ல; நீதிதான்’’ என ஆவேசமாக கூறினார்.

இந்நிலையில், ரேவாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷுவை சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த போலீசார் கைது செய்தனர்.


Advertisement