பெண்களுக்கும் அந்த விஷயத்தில் உபயோகமான வயகரா... நடந்தது இதுதான்.. பிறந்ததோ குழந்தை..!

பெண்களுக்கும் அந்த விஷயத்தில் உபயோகமான வயகரா... நடந்தது இதுதான்.. பிறந்ததோ குழந்தை..!


Viagra Tablet Use Girl to Pregnant

ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் வயகரா மாத்திரை பெண்களுக்கு குழந்தைப்பேறுக்கு உதவலாம் என பிரிட்டனில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் நாட்டை சேர்ந்தவருக்கு 2002 இல் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், 8 வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைக்கான கருத்தரிப்பு நடந்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. சோதனைக்குழாய் குழந்தைக்கான முயற்சியும் 3 முறை தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு, கருத்தரிப்புத்துறை நிபுணரின் ஆலோசனைப்படி பெண்ணுக்கு வயகரா கொடுத்துள்ளனர். 

இதனால் பெண்ணின் கருப்பை சுவர் தடிமனாக வளரலாம், அப்படி வளர்ந்தால் குழந்தைப்பேறு நிச்சயம் என்று எண்ணியுள்ளனர். முதலில் தம்பதி யோசித்தாலும், பின் பெண் வயகரா சாப்பிட்டுள்ளர். முதலில் பெண் வயகரா சாப்பிட்டதும் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல் சிவந்துபோக, நாளொன்றுக்கு ஒரு வயகரா என சாப்பிட்டு கருப்பை சுவர் தடிமன் ஆவதை மருத்துவர்களின் உதவியுடன் உறுதி செய்துள்ளனர்.

Viagra

இதனையடுத்து, நான்காவது முறையாக பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையின் மூலமாக விந்தணு செலுத்தப்பட, குழந்தையும் இறுதியில் பிறந்துள்ளது. இந்த தகவல் சமீபத்தில் குழந்தைப்பேறு சார்ந்த ஊடகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வயகரா மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்றி ஆணோ, பெண்ணோ எடுப்பது உயிரிழப்பை ஏற்படுத்தலாம், கவனம் தேவை.