சுய இன்ப பழக்கத்தை எளிதில் கைவிடுவது எப்படி?..!

சுய இன்ப பழக்கத்தை எளிதில் கைவிடுவது எப்படி?..!


How to Avoid Hand job or Self Enjoy Tamil Tips

இளம் தலைமுறையிடம் இன்றளவில் உடலுக்கு தீமை விளைவிக்கும் செயல்கள், எதிர்காலத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் செயல்கள் வெகுவாக அதிகரித்து இருக்கின்றன. கையளவில் உள்ள செல்போன் திரையில் ஆ., படம் பார்த்து நிமிடத்தில் சுய இன்பம் செய்து, தங்களின் எதிர்கால தாம்பத்திய இன்பத்தை இழந்து வருகின்றனர். 

இதனால் எதிர்காலத்தில் திருமணம் நடைபெற்று முடிந்த பின்னர், மனைவியுடன் உல்லாசமாக இருப்பது பாதிக்கப்படுவது அல்லது மனைவி அழகாக இருந்தாலும் அவருடன் உல்லாசமாக இல்லாமல், சுய இன்பம் செய்து உறங்குவது போன்றவை நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டும் இல்லை., அவர்களுடன் திருமணத்திற்கு பின்னர் சேர இயலாமல் அல்லது முழுமையான இன்பம் கிடைக்காமல் அவதிப்படும் பெண்களும் தான். 

18 plus

இது பின்னாளில் பெண்களை தனக்கு தேவையான இன்பத்தை தரும் நபரை நோக்கி அழைத்து சென்று, அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகிறது. வளரும் இளம் பருவத்தில் சிலர் செய்யும் தவறான விஷயம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் இல்லற வாழ்க்கையையும் பாதிக்கிறது. கைப்பழக்கம் என்ற சுய இன்ப பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து இனி தெரிந்துகொள்ளலாம். 

கைப்பழக்கத்தை உடனடியாக விடுகிறேன் என்ற முடிவு, மனதின் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தி தோல்வியில் கொண்டு சென்று விடும். அழுக்கடைந்து இருக்கும் மனதை தூய்மை செய்து, தினமும் இறை வழிபாட்டில் ஈடுபடலாம். நம் மீது நாமே தன்னம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் செயல்களை செய்யலாம். 

18 plus

வாழ்க்கையில் குறுகிய காலத்திற்குள் சாதிக்க விரும்புவதை குறிக்கோளாக வைத்து, அதற்காக நமது முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மனதை தூய்மைப்படுத்த யோகா செய்யலாம். புனித நூல்களை வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது, மனதுக்கு இதமான பாடல்களை கேட்பது என மனதை சுய இன்ப பழக்கத்தில் இருந்து மடைமாற்றி பயணிக்கலாம். 

சுய இன்பம் செய்வதில் தவறில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்களே என்று கேட்டால், எதுவும் அளவோடு இருந்தால் நம்மை என்று தான் கூற முடியும். மேற்படி அவரவரின் தனிப்பட்ட விருப்பம்.