அந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகள்..! கணவராக செய்யவேண்டியது இதைத்தான்.!

அந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகள்..! கணவராக செய்யவேண்டியது இதைத்தான்.!



during-sex-with-husband-vagina-pain-issue-how-to-solve

உடலுறவில் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் வலி ஏற்படுவது மருத்துவ ரீதியாக Dyspraunia என்று கூறப்படுகிறது. இதனை Superficial Dysparunia, Deep Dysparunia என இரண்டு வகையாக பிரிக்கலாம். கணவராக செய்யவேண்டிய விஷயம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கணவன் - மனைவி உடலுறவின் போது வலி ஏற்படுவது இயல்பான ஒன்று தான் என்றாலும், சில பெண்களுக்கு ஏற்படும் வலியினால் அவர்களின் இல்லற வாழ்க்கையே பெரும் கேள்விக்குறியாகிவிடும். உடலுறவில் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் வலி ஏற்படுவது மருத்துவ ரீதியாக Dyspraunia என்று கூறப்படுகிறது. இதனை இரண்டு வகையாகவும் பிரிக்கலாம். 

1. Superficial Dysparunia :

Superficial Dysparunia என்பது உடலுறவு புணர்ச்சியின் தொடக்கத்திலேயே ஏற்படும் வலி ஆகும். 

2. Deep Dysparunia : 

Deep Dysparunia என்பது உடலுறவு புணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் ஏற்படும் வலி ஆகும். 

இந்த இரண்டு வலிகள் பெண்களுக்கு உடலுறவின் போது ஏற்பட்டாலும், பெரும்பாலானோர் அதனை வெளியே கூறுவது இல்லை என்றும், ஆண் துணையின் புரிதல் இல்லாமை காரணமாக வேறு சில பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்றும் பெண்கள் நினைக்கின்றனர். இவ்வலிகள் ஏற்பட முய்ய காரணமாக நேர்த்தியற்ற உடலுறவு நிலை அமைகிறது. உடலுறவில் ஈடுபடும் இருவரின் பிறப்புறுப்பில், உடலுறவு நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும். 

18 plus

ஆண்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு உடலுறவு இன்பம் ஏற்பட்டுவிட்டால் ஆணுறுப்பு விறைப்படைகிறது. பெண்களுக்கோ பெண் குறி விறைப்படைவது மட்டுமல்லாது, பெண்ணுறுப்பின் பகுதியில் சில திரவமும் சுரந்து பெண்ணுறுப்பை இலகுவாக்குகிறது. இம்மாற்றம் பெண்ணின் பெண்ணுறுப்பில் ஏற்படாமல் இருக்கும் நேரத்தில், ஆண் புணர்ச்சியில் ஈடுபட்ட இலகு தன்மை இல்லாத பெண்ணின் உறுப்பில் கடுமையான வலி ஏற்படும். இந்த வலிக்கு முழு பொறுப்பு ஆண் மட்டுமே. 

18 plus

நமது துணை உடலுறவுக்கு தயாராக இருக்கிறாரா? இல்லையா? அவருக்கு சுகத்தை ஏற்படுத்த வேண்டுமா? என்ற எண்ணமே இல்லாமல் புணர்ச்சியில் ஈடுபட்டால் அது வலியையே கட்டாயம் தரும். உடலுறவில் ஈடுபடும் ஆண்கள், தங்களின் மனைவி உடலுறவுக்கு தயாராக இருக்கிறாரா? என புரிந்து செயல்பட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை தொடங்காமல், பிற நடவடிக்கை மூலமாக பெண்ணுக்கு உணர்ச்சியை தூண்டி அவளை தயார் செய்து புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். புணர்ச்சிக்கு முன்னர் நடைபெறும் விஷயங்கள் Foreplay என்று ஆங்கிலத்தில் கூறப்படும். 

18 plus

இதனைத்தவிர்த்து, பிற சில காரணத்திற்காகவும் உடலுறவின் போது வலி ஏற்படலாம். பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றுகள், மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்ணுறுப்பில் ஏற்படும் உலர்தன்மை, உளவியல் பிரச்சனை, சிறுநீரக வாய்தொற்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண் போன்ற காரணத்தாலும் உடலுறவின் போது வலி ஏற்படும். 

18 plus

இவற்றில், பாலியல் ரீதியாக ஏற்கனவே தொல்லைக்கு, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிய பெண்கள் கணவருடன் கூடும் உடலுறவின் போது நேரடியாகவே எதிர்ப்பு அல்லது விரக்தியை காண்பிக்கலாம். அவ்வாறு மனைவி எதிர்ப்பை காண்பிக்கும் பட்சத்தில், அவர் பாலியல் பலாத்காரத்தால் அல்லது தொல்லையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்தால், முதலில் அவரது மனதில் கணவர் என்ற முறையில் நம்பிக்கையை பெற்று, அதன்பின்னர் அவருக்காக உணர்ச்சி ஏற்பட்டு படுக்கைக்கு அழைக்கும் போது உடலுறவு கொள்ளலாம். நீங்களும் பாலியல் பலாத்காரம் போல வற்புறுத்தினால் சோகமே மிஞ்சும். பெண்ணுறுப்பு உடலுறவுக்கு தகுந்த முறையில் இசைவாகமல் சுருங்கியபடியே இருந்தால் அது Vaginusmus என்று அழைக்கப்படும்.