அதிகாலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால் இவ்வுளவு நன்மைகளா?... தம்பதிகளே ஜமாய்.!

அதிகாலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால் இவ்வுளவு நன்மைகளா?... தம்பதிகளே ஜமாய்.!


couple-morning-enjoy-bed-sexual-intercourse-is-good-to

திருமணம் முடிந்த தம்பதிகள் தாம்பத்திய உறவுகளில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றே. இன்றுள்ள காலத்தில் பல்வேறு சூழ்நிலைகளால் தம்பதிகளிடையே தாம்பத்திய இணக்கம் என்பது குறைந்து வருகிறது. மேலும், இரவுகளில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டாலும், அதனை அவசர கதியில் முடித்துவிட்டு உறங்க செல்கிறார்கள். 

இது எதிர்கால வாழ்க்கையில் பெரும் சிக்கலை தம்பதிகளுக்குள் ஏற்படுத்தும். வேலைக்கு, பொது இடங்களுக்கு செல்ல என எப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நேரம் ஒதுக்கி செயலாற்றி வருகிறோமோ, அதனை போல தாம்பத்தியத்திற்கு நேரம் கட்டாயம் ஒதுக்க வேண்டும். அது அளவு கடந்த இருக்க வேண்டும். அதுவே தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கும். 

18 plus

அதிகாலை நேரங்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது. தம்பதிகள் அதிகாலை தாம்பத்தியம் மேற்கொண்டால் உடலில் ஆக்சிடோசின் என்று அழைக்கப்படும் ரசாயனம் வெளிப்படும். இது உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவி செய்கிறது. அதனைப்போல, மன அமைதி, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க, மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்சனைகள் தவிர்க்கவும் உதவி செய்கிறது. 

இரவு வேளைகளில் நன்றாக உறங்கும் நபர்களுக்கு காலை நேரங்களில் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பதால், காலை நேரங்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் ஹார்மோன் தூண்டப்படும். இதனால் காலை நேரத்தில் தாம்பத்தியம் மேற்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனை தம்பதிகள் இருவரும் திட்டமிட்டு செயல்படுவது நல்ல பலனை தரும்.