ஊரடங்கை உடைத்தெறிந்த காமம்..! பட்டப்பகலில் பப்ளிக்கா சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி..!

ஊரடங்கை உடைத்தெறிந்த காமம்..! பட்டப்பகலில் பப்ளிக்கா சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி..!


young-couple-kiss-in-puplic-place-at-singapore

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவிவருகிறது. இத்தகைய கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடிவருகிறது. 

இந்நிலையில்  பல நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு செல்லக்கூடாது எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. அதனால் கொரோனோவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் upper boon keng சாலையில் உள்ள இடத்தில் இளம்ஜோடியினர் சமூக விலகலை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் முத்தமிட்டபடி அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தொடர்ச்சியாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில், அங்கு விரைந்த போலீசார் அந்த இளம் ஜோடி மீது வழக்கு பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் 300 டாலர் அபராதம் விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.