உனக்கு நான் வேண்டுமா!! மட்டன் வேண்டுமா!! வைரலாகும் கணவனின் ட்வீட் பதிவு...

உனக்கு நான் வேண்டுமா!! மட்டன் வேண்டுமா!! வைரலாகும் கணவனின் ட்வீட் பதிவு...


you-want-me-or-mutton-viral-twitter

சைவ விரும்பியான நபர் ஒருவரின் மனைவி அசைவ உணவான மட்டனை விரும்பி சாப்பிட்டதும் கடுப்பாகி கணவன் செய்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

குறித்த நபர் சுத்தமான சைவ பிரியர். இவர் அசைவ உணவை விரும்பி சாப்பிடும் பெண்ணை காதலித்துள்ளார். இதனிடையே அந்த நபர், நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் நீ அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும் என்று கூறி திருமணம் செய்துள்ளார்.

mutton

அந்த பெண்ணும் ஓக்கே என கூறியுள்ளார்.ஆனால் அந்த பெண்ணால் மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. எனவே கணவருக்கு தெரியாமல் அடிக்கடி சாப்பிட்டு வந்துள்ளார்.இதனால், கடுப்பான கணவன் சில முறை அன்பாக கண்டித்துள்ளார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இம்முறை கோபமடைந்த கணவன் இவ்வாறு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மட்டன் வேண்டுமா? நான் வேண்டுமா? என அவசரத்தில் கேட்டுவிட்டேன். ஒருவேளை மட்டன் தான் வேண்டும் என கூறிவிட்டால் என் கதி? என்ன ஆகும் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.அதற்கு  நெட்டிசன்கள் காதல் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் சாப்பாடு இல்லாமல் வாழ முடியாது என தெரிவித்து வருகின்றனர்.