டெல்டா மாதிரி கிடையாது ஒமைக்ரான்... புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்யுங்கள்..!

டெல்டா மாதிரி கிடையாது ஒமைக்ரான்... புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்யுங்கள்..!


 World Health Organization Cancel New Year's celebration

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு மேலாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது பரிணாம வளர்ச்சியை அடைந்து ஓமிக்ரான் வைரஸாக உருப்பெற்றுள்ளது. 

உலக நாடுகள் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர போராடி வரும்நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருவதால் அவற்றை ரத்து செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டுள்ளார். 

அவர் கூறுகையில், வாழ்க்கையே ரத்தாகி விடுவதைவிட ஒரு நிகழ்வு ரத்து செய்யப்படுவது சிறந்தது. இப்போது கொண்டாடி பின்னர் வருத்தப்படுவதை விட, இப்போது இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பின்னர் கொண்டாடலாம். டெல்டாவை விட ஒமைக்ரான் குறிப்பிடத்தக்க அளவில் கணிசமாக பரவுகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.