அம்மாடியோவ்.. ஒரு ஷூ-வின் விலை இத்தனை கோடியா?.. தெரிஞ்சா ஹார்ட் அட்டாக் கன்பார்ம்.! தயாரிக்கவே 9 மாதமாகுமாம்.!!world-costly-shoe-price-in-dubai

 

தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் உலகில் நாம் பலவிதமான புதிய கண்டுபிடிப்புகளை பார்த்திருக்கிறோம். அதேபோல செல்வந்தர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணத்தில் அவர்கள் வாழும் ஆடம்பர வாழ்க்கை நமக்கு ஏக்கத்தை தரும்.

தமிழில் "தங்கத்தில் செருப்பு செய்தாலும் அதனை காலில்தான் போட வேண்டும். தலையில் போட முடியாது" என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் பொருட்டு துபாயில் உலகிலேயே அதிக விலையிலான ஷூ தயாரிக்கப்பட்டது. 

இது துபாயில் செயல்பட்டு வரும் நகை விற்பனை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு ஷூ ஜோடியை தயாரிக்க கிட்டத்தட்ட ஒன்பது மாத காலமாகும். 

நூறுக்கும் அதிகமான 15 காரட் வைரகற்கள், தங்க கட்டிகள் பயன்படுத்தப்பட்டு, 17 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.123 கோடி) மதிப்பில் இந்த ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது.