கொரோனாவுக்கு இதுவரை எத்தனை லட்சம் மக்கள் மரணம் தெரியுமா?? தயவு செய்து வீட்டிலையே இருங்க!!



world-corona-latest-count-and-updates

உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோன வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை ஒரு முடிவே இல்லாமல் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற பெரிய நாடுகளும் கொரோனாவின் தாக்கத்தால் பேரிழப்புகளை சந்தித்துவருகிறது.

corona

குறிப்பாக இந்தியாவின் நிலைமை மற்ற நாடுகளைவிட சற்று மோசமாகவே உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.31 கோடியை தாண்டி உள்ளது. அதாவது உலகம் முழுவதும் தற்போது வரை  16,31,65,572 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 83 ஆயிரத்து 230 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 1,02,953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் உலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,25,76,903 பேர் குணமடைந்துள்ளனர்.