உலகம்

காதல் தோல்வி! என்னையா ஏமாற்றினாய்.. காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Summary:

women send tons of onion to revenge boyfriend

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியில் வசித்து வந்தவர் ஜாவோ. இவர் நீண்ட நாட்களாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சீனாவில் மே 20ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படும். இந்நிலையில் ஜாவோ காதலர் தினத்தை தனது காதலனுடன் கொண்டாடவேண்டுமென ஆசைப்பட்டுள்ளார். ஆனால் இதற்கிடையில் அவரது காதலர் ஜாவோவை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.அதனால் ஜாவோ மூன்று நாட்களாக கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞர் ஜாவோவை பிரிந்தபின்பு சிறிதளவுகூட வேதனைப்படவில்லை என நண்பர்கள் மூலம் அவருக்கு தெரியவந்த நிலையில் ஜாவோ மிகுந்த கோபம் அடைந்துள்ளார். இந்நிலையில் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க 
அவர் 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அதனுடன் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி

 அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜாவோ மூட்டைமூட்டையாக அனுப்பிய வெங்காயத்தை கண்டு காதலர் திகைத்துப்போய் நிற்கும் புகைப்படம் வெளியாகி,வைரலாகி வருகிறது. இந்நிலையில் காதலரின் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் பயங்கரமான வெங்காய துர்நாற்றம் வீசுவதாகக் புகார் அளித்துள்ளனர்.


Advertisement