தோட்டத்தில் இருந்து திடீரென கேட்ட நாய்க்குட்டியின் அலறல் சத்தம்.. ஓடிச்சென்று பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..Women saved 9 months dog from rock snake viral video

நாய்க்குட்டி ஒன்று மலைப்பாம்பிடம் சிக்கிகொண்டநிலையில் நாய்க்குட்டியின் உயிரிமையாளர் பாம்பிடம் இருந்து நாயை மீட்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவில் வசித்துவருபவர் கெல்லி மோரிஸ். இவர் தனது வீட்டில் 9 மாத நாய்க்குட்டி ஒன்றை வளர்த்துவருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த நாய்க்குட்டி வீட்டின் அருகே உள்ளே தோட்டத்தில் விளையாக்கொண்டிருந்தபோது அங்கிருந்த புதருக்குள் இருந்து வெளியே வந்த மலைப்பாம்பு ஒன்று அந்த நாய்க்குட்டியை முழுவதும் தனது உடலால் இறுக்கி இழுத்துச்செல்ல முயல்கிறது.

பாம்பிடம் சிக்கிய நாய்க்குட்டி சத்தம் போடவே, அங்கு ஓடிவந்த வந்த கெல்லி மோரிஸ் தான் வளர்ந்துவரும் நாய்க்குட்டியை மலைப்பாம்பு ஒன்று இறுக்கி இருப்பதையும், அதனிடம் இருந்து மீளமுடியாமல் நாய்க்குட்டி தவிப்பதையும் கண்டு பதறியுள்ளார். உடனே அந்த பாம்பை தனது கைகளால் பிடித்து அதனை வேகமாக சுற்றியுள்ளார். இறுதியில் பாம்பின் பிடியில் இருந்து நாய் குட்டி தப்பிக்கிறது.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தநிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி..