இறந்தவர்களை வைத்து பல லட்சம் சம்பாதிக்கும் இளம் பெண்!! எப்படி தெரியுமா?? வைரலாகும் ஆஸ்திரேலியா பெண்..Women earning using dead persons death and hair in Australia

இறந்தவர்களின் முடி, பற்கள், சாம்பல் போன்றவற்றை வைத்து பலலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டிவருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதான ஜேக்யூ வில்லியம்ஸ் என்ற இளம் பெண் மெல்போர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில்  நகைகள் மற்றும் பொருட்கள் வடிவமைப்பில் டிப்ளோமா முடித்துள்ளார். தனது படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிய இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியில் இருந்த இவருக்கு, இறந்துபோன் அவரது நண்பரின் நினைவுகள் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளது. அப்போதுதான் இந்த வித்தியாசமான தொழிலை தொடங்க முடிவு செய்த்துள்ளார் ஜேக்யூ வில்லியம்ஸ். இறந்தவர்களின் உடலில் இருந்து பற்கள், முடி, அவர்களின் சாம்பல் ஆகியவற்றை கொண்டு செயின், மோதிரம் போன்ற ஆபரணங்களை தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

தங்களுக்கு பிடித்தவர்கள் தம்முடன் இல்லையே என வருத்தப்படுவார்கள், அவர்களின் உடலில் இருந்து பெறப்படும் பற்கள், முடி, சாம்பல் ஆகியவற்றை கொண்டு, ஜேக்யூ வில்லியம்ஸ் உதவியுடன் தங்களுக்கு பிடித்த ஆபரணங்களை செய்து அணிந்துகொள்கின்றனர்.

மேலும் அந்த ஆபரணங்களுடன் தங்கம் அல்லது வைரம் போன்ற பொருட்களையும் வைத்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்துகொடுத்து, அதற்கு பலலட்சம் ரூபாய் சன்மானமும் பெற்றுவருகிறார் ஜேக்யூ வில்லியம்ஸ்.