பிஸ்கட் சாப்பிட்டதால் இளம் பெண் மரணம்.. வெளியான அதிர்ச்சி காரணம்!Women death in England ate biscuit

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிஸ்கட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் நடன கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியூர் செல்லும் போது பிஸ்கட் ஒன்றை சாப்பிட்டுள்ளார். அந்த பிஸ்கட் சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Biscuit

இதனையடுத்து விசாரணை நடத்தியதில் அந்த இளம்பெண் சாப்பிட பிஸ்கட்டில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிஸ்கட் பாக்கெட்டில் வேர்க்கடலை குறித்து எதுவும் குறிப்பிடாததால் அவர் தெரியாமல் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளாக வேர்க்கடலை அலர்ஜி இருந்துள்ளது. அதன் காரணமாக அந்தப் பெண் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

Biscuit

மேலும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை செய்து வருகின்றனர். வேர்க்கடலை பிஸ்கட் சாப்பிட்டதால் 25 வயதான இளம்பெண் உயிரிழந்த பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.