அடுத்த ஷாக் செய்தி.. புதியவகை மார்பரக் வைரஸால் 9 பேர் பலி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

அடுத்த ஷாக் செய்தி.. புதியவகை மார்பரக் வைரஸால் 9 பேர் பலி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!



west-africa-guinea-marburg-virus-outbreak-confirms

 

மேற்கு ஆப்ரிக்க நாட்டில் உள்ள கினியாவில் மார்பர்க் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் எபோலா, கொரோனா போல விளக்கில் இருந்து மனிதர்களுக்கு பரவுவது ஆகும். 

வௌவால்களில் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ், மிகவும் ஆபத்தான நோய்கிருமிகளில் ஒன்றாகும். இவை கடுமையான காய்ச்சல், இரத்தப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது. செயல்திறனை குறைகிறது. 

West Africa

அங்கு தற்போது வரை 16 பேருக்கு மார்பரக் வைரஸின் அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் உலக சுகாதார அமைப்பிடம் ஆலோசனை பெறப்பட்டு, ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன

பிலோ வைரஸின் பகுதியாக கருதப்படும் மார்பரக் வைரஸ், எபோலா நோயின் வகைகளில் ஒன்றாகும். இந்த தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களின் இறப்புக்கு பின்னர் இரத்த மாதிரிகளை சோதித்தபோது மார்பரக் வைரஸ் காரணமாக உயிரிழந்தது உறுதியானது. இவ்வைரசுக்கு சிகிச்சை, தடுப்பூசி இல்லை.