இப்படி ஒரு மருமகளா! குடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்! காபியில் சர்க்கரைக்கு பதிலாக அதை கலந்து..... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!



viral-funny-video-daughter-in-law

இணையத்தில் தினமும் பல்வேறு வீடியோக்கள் வைரலாகினாலும், சில நிமிடங்களில் சிரிப்பை பரவச் செய்யும் காட்சிகள் தான் அதிகம் பேசப்படுகின்றன. தற்போது ஒரு நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

மருமகளின் அப்பாவி தவறு

வீடியோவில், கிராமப்புற வயல்வெளியில் குடும்பத்தினர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மருமகள் ட்ரேயில் டீ கொண்டு வந்து அனைவருக்கும் வழங்குகிறார். அப்போது மாமியார், “இதுல சர்க்கரை போட்டியா?” என்று கேட்க, மருமகள், “ஆமாம் அம்மா, இரண்டு கைப்பிடி நிறைய போட்டேன்” என்று பதிலளிக்கிறார்.

யூரியா கலந்த டீ

அதற்கு மாமியார் சந்தேகத்துடன் யூரியா பையை காட்டி, “இதுலருந்துதானா எடுத்தது?” என்று கேட்க, மருமகள் அப்பாவியாக “ஆமாம், அங்க இருந்த வெள்ளை பொடியை எடுத்தேன்” என்று சொல்கிறார். அதனால் அவர் சர்க்கரைக்கு பதில் யூரியாவை டீயில் கலந்துவிட்டார் என்பது வெளிப்படுகிறது. இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கின்றனர்.

இதையும் படிங்க: அபூர்வ காட்சி... நீர்நிலையில் பம்பரம் போல சுழன்று சண்டை போடும் இரண்டு பாம்புகள்! வைரலாகும் வீடியோ...

இணையத்தில் வைரலான கலகலப்பு

இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி, ‘எமராஜனின் வேலையை எளிதாக்கிவிட்டாள் இந்த பெண்’ என்று நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் சிரிப்பில் மூழ்க, சிலர் அச்சத்தில் உறைந்துபோன தருணம் பார்ப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளது.

மருமகளின் சின்ன தவறு தான் இணையத்தில் பெரும் வைரல் கலகலப்பாக மாறி, சிரிப்பை பரப்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: பார்க்கும்போது பதறுது! பேருந்து மோதியதில் நொடியில் பலியான 2 பேர்! யாரு மேல தான் தப்பு! பதறவைக்கும் சிசிடிவி காட்சி....