ஒரே நாளில் 19000.. அமெரிக்காவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

ஒரே நாளில் 19000.. அமெரிக்காவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!



USA corono cases crossed one lakh

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27.03.2020 ல் மட்டும் 19000க்கும் மோலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் மட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை அந்நாட்டில் 81,340 பேர் பாதிக்கப்பட்டு 3292 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

Coronovirus

அதே சமயத்தில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் வீரியமடைந்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 590000க்கும் மேலானோருக்கு பாதிப்பும் 27000க்கும் மேலான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. 133000க்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர்.

இறந்தவர்களின் பட்டியலில் 9000க்கும் மேலான இறப்புகளுடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா 105,016 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 27.03.2020 ஒருநாளில் மட்டும் அமெரிக்காவில் 19000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாடில் இறப்பு 1701; 2359 பேர் குணமடைந்துள்ளனர்.