அப்பாடா.. ஒரு வழியா கழட்டியாச்சு! 6 ஆண்டுகளுக்கு பிறகு முதலைக்கு கிடைத்த விடிவுகாலம்! வைரலாகும் வீடியோ!!

அப்பாடா.. ஒரு வழியா கழட்டியாச்சு! 6 ஆண்டுகளுக்கு பிறகு முதலைக்கு கிடைத்த விடிவுகாலம்! வைரலாகும் வீடியோ!!



tyre-remove-from-crocodile-neck-after-6-years

இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் முதலை ஒன்று வாழ்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் ஒன்று அந்த முதலையின் கழுத்தில் மாட்டியது. மேலும் முதலை வளர வளர டயர் கழுத்தை இறுக்கிகொண்டே சென்றுள்ளது.

இந்நிலையில் முதலையின் கழுத்தில் மாட்டிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக எந்த பலனும் இல்லை. டயரை கழற்ற முடியவில்லை. மேலும் முதலையின் கழுத்தில் இருக்கும் டயரை அகற்றுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்த போதும் முதலை மீதுள்ள அச்சத்தின் காரணமாக யாரும் முன்வரவில்லை.

 இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 35 வயது நிறைந்த டிலி என்ற விலங்குகள் நல ஆர்வலர் பிரத்யேக பொறி ஒன்றை அமைத்து அதில் கோழியை இரையாக வைத்து முதலையை பிடித்துள்ளார். பின் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு முதலையின் கழுத்தில் இருந்து டயரை வெட்டி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதலை சுதந்திரமாக மீண்டும் ஆற்றில் விடப்பட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.