பெண்ணை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொலை செய்த தலிபான்கள்.. ஹசாரா இன மக்களை கொன்றுகுவிக்கும் கொடூரம்.!

பெண்ணை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொலை செய்த தலிபான்கள்.. ஹசாரா இன மக்களை கொன்றுகுவிக்கும் கொடூரம்.!


Twitter Netizens Trend about Taliban Will Bite Back

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதும், அந்நாட்டின் அதிகாரத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அமெரிக்கா - தலிபான்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைவது போல தோன்றியபோதிலும், தலிபான்கள் பயங்கரவாத செயலை தொடர்ந்து வந்தால் அவற்றில் பின்னடைவு ஏற்பட்டது. 

அமெரிக்க படைகள் இறுதியாக அமெரிக்காவில் இருந்து முழு விலக்கம் பெற்றுக்கொள்ள தயாரானதும் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி வந்த தலிபான் பயங்கரவாதிகள், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றியது. ஆப்கானிய மக்கள் பலரும் அண்டை நாடுகள் மற்றும் உதவி செய்யும் நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

தலிபான்கள் வசம் ஆட்சி சென்றதும் அவர்கள் பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில், தாலிபான்களுக்கும் - ஐ.எஸ். கே பயங்கராதிகளுக்கும் இடையே ஆட்சி பகிர்வு பிரச்சனையில் இருதரப்பும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் ஹசரா இன மக்கள் தாலிபான்களால் கடந்த காலங்களில் கொன்று குவிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் அந்த பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. பச்சிளம் சிறுவன் கண்முன்னே தலிபான்கள் ஹசரா இனத்தை சார்ந்த தந்தையை கொலை செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

இதனைப்போல, பெண்ணொருவரை தலிபான்கள் சூழ்ந்துகொண்டு இருக்கும் நிலையில், ஒரு தலிபான் பயங்கரவாதி பெண்ணை ஈவு இரக்கமின்றி சுட்டு கொலை செய்யும் பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது. ஹசரா இனத்தவர்  சென்ற பேருந்தை மறித்து, பேருந்தில் பயணம் செய்தவர்களை தாலிபான்கள் கொன்று குவித்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ள நெட்டிசன்கள் தாலிபான்களின் கடந்த கால கொடூர செயல்கள் மீண்டும் அரங்கேற்றப்பட்டு வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

#TalibanWillBiteBack