தொப்பையிலேயே அடிச்சு என்னமா தாளம் போடுறாங்க.. துருக்கி இசைக் கலைஞர்களின் வினோத வீடியோ!

தொப்பையிலேயே அடிச்சு என்னமா தாளம் போடுறாங்க.. துருக்கி இசைக் கலைஞர்களின் வினோத வீடியோ!


Turkish musicians create music from belly

உடம்புல எங்கு அடிச்சாலும் இசையா வர்ர சினிமா காமெடி தான் நம்ம ஊர்ல ரொம்பவும் பிரபலமான ஒன்று. ஆனால் துருக்கியில் நிஜமாவே உடம்புல அடிச்சு இசையை உருவாக்கியுள்ளார்கள் அந்த ஊர் இசை கலைஞர்கள்.

துருக்கியை சேர்ந்த பீஜன் என்ற இசைக் கலைஞர் மற்றும்‌ இசை ஆசிரியை தனது ட்விட்டர் பக்கத்தில் வினோதமான இசை வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வரிசையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் நல்ல உடல் பருமனான இரண்டு நபர்களின் உடம்பில் கைகளால் தட்டி‌ 6 பேர்‌ தாளம் போடுகின்றனர். சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த பருமனான நபர்களும் அசையாமல் ஒத்துழைப்பு தருகின்றனர். அந்த வீடியோவின் கடைசி நொடியில் ஒரு நபர் செய்யும் காரியம் இன்னும் வேடிக்கையாக உள்ளது. நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.