
Tsunami Warning
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டியானோ தீவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிலவியல் மையம் வெளியிட்டுள்ள தகவலில், பிலிப்பைன்சின் தெற்கே மின்டானோ தீவில் டாவோ நகரை மையம் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் ஏற்பட்டது குறித்து உடனடி தகவல் இல்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கிமீ தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
Advertisement
Advertisement