உலகம் லைப் ஸ்டைல்

டொனால்ட் ட்ரம்பை விவாகரத்து செய்தால் அவரது மனைவிக்கு இத்தனை கோடி பணம் கிடைக்குமா? அடேங்கப்பா...

Summary:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை அவரது மனைவி விவரகத்து செய்தால் அவருக்கு இழப்பீடாக சுமார் 372 கோடி ரூபாய் பெறுவார் என்ற தகவல் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை அவரது மனைவி விவரகத்து செய்தால் அவருக்கு இழப்பீடாக சுமார் 372 கோடி ரூபாய் பெறுவார் என்ற தகவல் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டாலும், தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார். இதனிடையே ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பை விவாகரத்து செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் எப்போது பதவியில் இருந்து வெளியேறுவார், அவரை எப்போது விவாகரத்து செய்யலாம் என மெலானியா காத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் குறித்து மெலானியா இதுவரை எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. இதுஒருபுரம் இருக்க, ஒருவேளை மெலானியா ட்ரம்பை விவாகரத்து செய்தால் அவரது விவாகரத்து தீர்வுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் ( ரூ. 372.16 கோடி) கிடைக்க கூடும் என சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்...


Advertisement