தோல்வி அடைந்த உடனே டிரம்புக்கு இப்படி ஒரு சோதனையா? அமைதியாக இருந்த அவரது மனைவி போட்ட முதல் டுவிட்

தோல்வி அடைந்த உடனே டிரம்புக்கு இப்படி ஒரு சோதனையா? அமைதியாக இருந்த அவரது மனைவி போட்ட முதல் டுவிட்



Tramp and melaniya tramp divorce matter

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்தநிலையில் அவரது மனைவி மெலானியா அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வைரலாகிவருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் 46 வது அதிபராக அந்நாட்டின் ஜனநாயகட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஷ் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

ஜோ பைடன் அதிபராக வெற்றிபெற்றாலும், தனது தோல்வியை இன்றுவரை ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தான் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது மனைவி மெலனியா ட்ரம்பை விரைவில் விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக அவரது முன்னாள் உதவியாளர்கள் கூறியிருந்தனர்.

Tramp

ட்ரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறியதும் இந்த விவாகரத்து நடைபெறலாம் என கூறப்படுகிறது. மேலும் ட்ரம்ப் அதிபராக இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்ய மெலானியா முடிவு செய்ததாகவும், ஆனால் அப்படி செய்தால் அது ட்ரம்பிற்கு பெரும் அவமானமாக அமையும் என்பதால் அவர் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு இருப்பது ஏற்கனவே அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. பல்வேறு பொது இடங்களில் தனது மனைவி மெலானியாவை அவமானப்படுத்தும் விதமாக ட்ரம்ப் நடந்து உள்ளார். என்னதான் இவர்களின் மனக்கசப்பு உலகமறிந்த ஒன்றாக இருந்தாலும் ஆனால் அப்டியெல்லாம் ஒன்றும் இல்லை என இருவரும் மருத்துவந்தனர்.

தற்போது விவாகரத்து செய்தி வைரலாகிவரும்நிலையில், இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலும், தனது கணவர் டிரம்ப்பிற்கு ஆதரவாகவும் மெலனியா டிரம்ப் டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தல்களுக்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும், அது சட்டவிரோதமானதாக அல்ல, நமது ஜனநாயகத்தை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.