இந்தியா உலகம்

உறுதியெடுக்க நீங்கள் தயாரா?.. இனியாவது நலமுடன் வாழ்வோம்.!

Summary:

உறுதியெடுக்க நீங்கள் தயாரா?.. இனியாவது நலமுடன் வாழ்வோம்.!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் நவ. 25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் பெண்கள் பாலியல் பலாத்காரம், குடும்ப வன்முறைகள், ஆதிக்கம் என்று பலவகை பெயரால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். 

இந்த பிரச்சனையில் இருந்து பெண்களை பாதுகாத்து, அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1960 ஆம் வருடத்தில் டொமினிக்கன் குடியரசில் அரசியல் ஆர்வலர் மிராபால் சகோதரிகள் கொலை செய்யப்பட்டதன் வரலாற்று நாள், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினமாக பின்னாளில் உருவாகியது. 

இதனைப்போல, கடத்த 1981 ஆம் வருடம் அமெரிக்கா - கரீபியன் பெண்ணியவாதி ஆர்வலர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக நவ. 25 ஆம் தேதியை அறிவித்தனர். பின்னர். பிப்ரவரி 7 ஆம் தேதி 2000 வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் அதிகாரபூர்வமாக்கப்பட்டது. 

பாலின சமத்துவம், மனித உரிமைகள், பொதுசுகாதார முன்னுரிமை என ஒவ்வொரு விஷயத்தையும் இன்று விழிப்புணர்வாக பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் விஷத்தை உலக சுகாதார அமைப்பும் உறுதிபட தெரிவித்து இருக்கிறது. 

இன்றைய நாளில் இருந்து 16 நாட்கள் வரை பெண்களின் மீதான வன்மத்தை குறைக்கும் வகையில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகள் குறித்த வாசகங்கள் அதிகம் பகிரப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச அளவில் இன்றைய நாளில் உறுதியெடுத்துக்கொண்டும் வருகின்றனர். 

தாய், தங்கை, தாரம் என்று பல்வேறு உறவுகளில் நம்மிடையே அறிமுகமாகாத பெண்கள் இல்லை. பெண்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து, பெண்களை போற்றுவோம். அவர்களை பாதுகாப்போம். அன்போடு இருப்போம். 


Advertisement