இப்படியும் ஒரு கடத்தல்!.. பலே கில்லாடி பெண்களை தூண்டில் போட்டு தூக்கிய போலீஸ்..!

இப்படியும் ஒரு கடத்தல்!.. பலே கில்லாடி பெண்களை தூண்டில் போட்டு தூக்கிய போலீஸ்..!


The women were caught trying to smuggle drugs hidden in their hair

பொலிவியா விமான நிலையத்தில், சவுரி முடிக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்த முயன்ற பெண்கள் பிடிபட்டனர். 

பொகோட்டா, விமான நிலையங்களில் தங்கம்,போதை பொருள் போன்றவை கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடத்தல்  நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தாலும், கடத்தலில் ஈடுபடுவோர் புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி கடத்தல் வேலையை செய்து கொண்டு தான் உள்ளனர். 

இதையடுத்து இரண்டு பெண்கள் தலையில் மாட்டிக்கொள்ளும் சவுரி முடிக்குள் சுமார்  இரண்டு கிலோ எடையுள்ள கொகைன் போதைப் பொருளை கடத்த முயன்ற போது விமான நிலையத்தில் பிடிபட்டனர். 

இருவேறு விமான நிலையங்களில் செய்த சோதனையில், அந்த பெண்கள் அவர்கள் தலையில் வைத்திருந்த சவுரி முடிக்குள் போதைப் பொருளை மாத்திரை வடிவில் ஒளித்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். போதைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த பெண்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.