கருவில் சிதைந்த குழந்தை, ஏஞ்சலாக வந்த அதிசயம்.. வியந்து போய் கண்ணீர் விட்ட தாய்.!

கருவில் சிதைந்த குழந்தை, ஏஞ்சலாக வந்த அதிசயம்.. வியந்து போய் கண்ணீர் விட்ட தாய்.!



the-shock-that-awaited-the-woman-after-the-miscarriage

ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த கருச்சிதைவுக்கு பிறகு அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்பு அந்த குழந்தை வளர்ந்து அந்த பெண்ணுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த லாரா என்ற பெண் முதலில் கர்பமாகியிருக்கிறானார். பின்பு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தனக்கு கருச்சிதைவு  ஏற்பட்டது அவருக்கு தெரியவில்லை. அதன் பிறகு மறுபடியும் அவர் கர்ப்பம் தரித்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். தற்சமயம் அந்த சிறுவனுக்கு 4 வயதாகிறது. அந்த சிறுவனின் பெயர் லூக்கா .

ஒரு நாள் அந்தப் பெண் தன்னுடைய மகனை குளிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவன் தன்னுடைய தாயிடம் நான் உங்கள் வயிற்றுக்குள் வாழ்ந்தேன். அது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டான். அதற்கு லாரா ஆம் எனக்கு தெரியும், முன்பு நீ என்னுடைய வயிற்றுக்குள் இருந்தாய் தற்போது நாம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

pregnentஅதற்கு அந்த சிறுவன் லூக்கா இல்லை அம்மா நான் முன்னர் ஒரு முறை உங்கள் வயிற்றில் வாழ்ந்தேன். ஆனாலும் நான் திடீரென்று இறந்து விட்டேன். நான் இறந்திருந்தாலும் தங்களை தொடர்ந்து தேடிக்கொண்டேயிருந்தேன்.  ஆனாலும் உங்களை அவ்வளவு எளிதில் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

 நான் கூப்பிட்டதும் உங்களுக்கு கேட்கவில்லை, எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதன் பிறகு ஒரு ஏஞ்சலாக நான் மாறினேன். பின்னர் மறுபடியும் நான் உங்களிடம் வரவேண்டும் என்று விரும்பினேன். அதன் பின் தான் உங்கள் வயிற்றுக்குள் நான் மீண்டும் தோன்றினேன் . தற்சமயம் மறுபடியும் உங்களுடைய மகனாக நான் பிறந்து விட்டேன் என அந்த சிறுவன் லூக்கா கூறியிருக்கிறார்.

pregnent

தன்னுடைய மகன் இப்படி தெரிவித்ததை கேட்டவுடன் அதிர்ந்து போனார் லாரா அதன் பின் அவர் தன்னுடைய மகனிடம் ஏஞ்சல்கள் பற்றியெல்லாம்  நான் தெரிவித்ததேயில்லை.  ஆகவே என்னுடைய மகன் தெரிவித்ததை கேட்டு நான் கலங்கிப் போனேன். மேலும் எனக்கு இதற்கு முன்னர் கருச்சதை ஏற்பட்டதை கூட தான் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய மகன் மூலமாகத்தான் அது எனக்கு தெரிய வந்தது என்று லாரா கூறியுள்ளார்.