மியான்மரில் இராணுவம் அட்டகாசம்.. வான்வழி தாக்குதல் நடத்தி 100 பேரை கொன்று குவித்த பயங்கரம்..!



 The miyanmar army that killed 100 people in an airstrike

ஆட்சியை தனதாக்கிய மியான்மர் இராணுவம் தொடர்ந்து மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2021 ம் ஆண்டு பர்மாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போரை கொன்று குவித்து வருகிறது. தற்போது வரை 3000 மக்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். 

மியான்மர் இராணுவத்தின் கொடூர செயல்களால் உலக நாடுகள் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தாலும் பலன் இல்லை. அங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் மியான்மர் நாட்டில் இருக்கும் சஹாயிங் மாகாணம் கன்பாலு, பஜீஜியி கிராமத்தில் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.