ஆசை ஆசையாக லண்டனில் மகனை படிக்க அனுப்பிய விவசாயி... தண்ணீரில் தத்தளித்த மாணவரின் பரிதாப முடிவு.!

ஆசை ஆசையாக லண்டனில் மகனை படிக்க அனுப்பிய விவசாயி... தண்ணீரில் தத்தளித்த மாணவரின் பரிதாப முடிவு.!



the-coimbatore-student-who-drowned-in-the-birmingham-ca

கோவையைச் சார்ந்த மாணவர் லண்டன் பர்மிங்காம் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவரது மகன் ஜீவந்த் குமார்  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம், தென்றல் நகரில் வசித்து வந்தார். இவர் லண்டனில் உள்ள ஆஸ்டின் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் தொடர்பான ஒரு ஆண்டு படிப்பு  படிப்பதற்காக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் லண்டன் சென்றார்.

tamilnadu

இவரது படிப்பு இந்த வருடம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை இந்திய நேரப்படி காலை 4:30 மணிக்கு ஜீவந்த் குமார் பர்மிங்காம் கால்வாயில் உயிருக்கு தத்தளித்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியுடன் போராடினர் . ஆனாலும் ஜீவந்த்குமார்  உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து கோவையில் வசித்து வரும் அவரது தந்தை சிவக்குமார் கூறுகையில் "கடந்த ஏப்ரல் மாதம் தங்களை வந்து சந்தித்து நலம் விசாரித்து விட்டு சென்றதாக தெரிவித்தார். மேலும் படிப்பு முடிந்த பின் அங்கேயே வேலை கிடைத்தாலும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் ஜீவந்த்குமார் தெரிவித்து இருக்கிறார். லண்டனில் உள்ள தமிழ் சங்கம் மற்றும் இவருடன் படித்த மாணவர்கள் உடலை கோவைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அப்படி இந்தியாவிற்கு அவரது உடலை அனுப்ப முடியவில்லை என்றாலும்  நாங்கள் லண்டன் செல்ல தயாராக இருக்கிறோம் என அவரது தந்தை சிவக்குமார் உருக்கமுடன் கூறினார்.