நடந்துசெல்லும் மனிதனை தாக்கிய மின்னல்.. அடுத்து என்ன நடந்தது பாருங்க.. வைரல் வீடியோ..

நடந்துசெல்லும் மனிதனை தாக்கிய மின்னல்.. அடுத்து என்ன நடந்தது பாருங்க.. வைரல் வீடியோ..



Terrifying Viral Video Shows Man Hit by Lightning Strike

நேரடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிர் பிழைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.உள்ளூர் ஊடகங்களின்படி, ஜகார்த்தாவின் வடக்கில் கனரக இயந்திரங்களைக் கையாளும் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரியும் 35 வயதுடைய நபர், பணியில் இருந்தபோது மின்னல் தாக்கியது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியில், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் அந்த நபர் திறந்த வெளியில் நடந்து செல்வதைக் காட்டுகிறது.

சில நொடிகளுக்குப் பிறகு, ஒரு மின்னல் அந்த நபரைத் தாக்குகிறது. மேலும் மின்னல் தாக்கிய பிறகு அந்த இடத்தில் இருந்து தீப்பொறிகள் பறக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட நபர் மின்னல் தாக்கி சரிந்துவிழுவதை பார்த்த சக ஊழியர்கள், உடனே ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அந்த நபரின் கைகளில் இருந்த வாக்கி-டாக்கி மின்னல் வெளியேற்றத்தை ஈர்த்திருக்கலாம் எனவும், அதனாலயே அவரை மின்னல் தாக்கியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. அதேநேரம், அவர் கையில் வைத்திருந்த குடையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.