அதிபயங்கர சம்பவம்.. பாதுகாப்பு படையினரை குறிவைத்து குண்டு வெடிப்பு.. ஐவர் பலி..!terrible-incident-blast-targeting-security-forces-five

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் ஐவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் தேடா இஸ்மாயில் கான் நகரில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த குண்டானது வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

bomb blast

இருப்பினும் இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.