திடீர் வயிறு வலியால் ஸ்கூட்டியில் ஹாஸ்பிடல் போன பெண்! சில நிமிடங்களில் நடந்த ட்விஸ்ட்! இந்த விஷயத்தில் இப்படியா இருக்குறது! அதிர்ச்சி சம்பவம்...

மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் எசோ நகரில் நடந்துள்ள பிரசவ சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 16ம் தேதி, மதிய உணவுக்குப் பிறகு வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தானே மின்சார பைக்கில் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வயிற்றுவலி என எண்ணியதில் இருந்து பிரசவமாக மாறியது
லீ என்ற அந்த பெண், முதலில் வயிற்றுவலி காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றார். மேலும் சாப்பிட்டதாலே வலிக்கிறது என நினைத்து இருந்தார். ஆனால் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் குழந்தை பிறக்கத்தக்க நிலை அடைந்திருப்பது தெரியவந்தது. அம்னியாடிக் திரவம் உடைந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மகப்பேறு குழு அழைக்கப்பட்டது. பிற்பகல் 3.22 மணிக்கு, இயற்கையாகவே ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஆரோக்கியமாக பிறந்த சிறு குழந்தை
பிறந்த குழந்தையின் எடை சுமார் 2.5 கிலோகிராம் என்று மருத்துவமனை கூறியது. குழந்தை நலமாக இருப்பதை உறுதி செய்த பிறகு, லீ மேலதிக பராமரிப்புக்காக நகர சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: Video: நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை மற்றும் தீ! அலறிய பயணிகள்! பதைபதைக்க வைக்கும் வீடியோ..
கர்ப்பம் என்பதை உணராத தாய்
பிரசவத்திற்கு பிறகே தான் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்ததாக லீ கூறினார். “மாதவிடாய் தாமதம் அடிக்கடி நடப்பதால் நான் கவலைப்படவில்லை. என் முதல் குழந்தையின் போது இருந்த அறிகுறிகள் இப்போது எதுவும் இல்லை,” என கூறியுள்ளார்.
இது ஒரு திட்டமிட்ட இல்லாத பிரசவம்
லீக்கு ஏற்கனவே ஒரு ஆறு வயது மகன் இருக்கிறார். இரண்டாவது குழந்தை வேண்டாம் என்ற திட்டமோடு இருந்ததாகவும், உறவில் எச்சரிக்கையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும் சமீபத்திய எடை அதிகரிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததால்தான் இந்த நிலை உருவானதாக கூறப்படுகிறது.
கணவரின் ஆதரவும் சமூக ஊடகங்கள் தரும் எதிரொலியும்
வேறு நகரத்தில் பணியாற்றிய கணவர், மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்ததும் உடனே எசோவிற்கு வந்து, மனைவியும் குழந்தையும் நலமுடன் இருப்பதை உறுதி செய்தார். இந்த சம்பவம் சீனாவின் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து பயத்தை கிளப்பும் பாபா வாங்கா கணிப்புகள்! மீண்டும் வைரஸ் தொற்று? அதிர்ச்சியில் மக்கள்...