ஆத்தாடி.. இதுவா! விமானத்தில் உணவு சாப்பிட்டவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! வீடியோவை பார்த்தா நடுநடுங்கி போயிருவீங்க!!

ஆத்தாடி.. இதுவா! விமானத்தில் உணவு சாப்பிட்டவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! வீடியோவை பார்த்தா நடுநடுங்கி போயிருவீங்க!!


Snake head in food at flight

துருக்கியின் அனகாராவிலிருந்து ஜேர்மனியின் டஸ்ஸல்டார்ஃவ் நகருக்கு சென்ற சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் பணியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் காய்கறிகள், கிழங்குடன் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை இருந்துள்ளது. 

அதைக் கண்ட பணியாளர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும்  அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பகர்ந்துள்ளார். இதுகுறித்து சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், எங்களது நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதையே இலட்சியமாக கொண்டுள்ளோம்.

இதுபோன்று இதுவரை நடந்தது இல்லை. இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.  இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை அறிக்கை வெளிவரும் வரை அந்த கேட்டரிங் சப்ளையருடனான ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.