மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ஷாக் வீடியோ!! கரும்பு தோட்டம் அருகே காரை நிறுத்திச்சென்ற விவசாயி.!! திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!
கரும்பு தோட்டம் அருகே நிறுத்திவிட்டு சென்ற காரை திரும்பி வந்து பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது.
தாய்லாந்தின் க்ளோங் யாங் எனும் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் காரில் தனது கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார். கரும்பு தோட்டத்தை சுற்றிபார்த்துவிட்டு அந்த நபர் மீண்டும் தனது காரின் அருகில் வந்துள்ளார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியை பார்த்துள்ளார்.
நிறுத்திவிட்டு சென்ற காரின் முன்பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதனை பார்த்த அவர் உடனடியாக கார் கதவுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை மூடியுள்ளார். உடனே அந்த பாம்பு காரின் பெட்ரோல் டேங்கிற்குள் புகுந்துகொண்டது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு வந்த வனத்துறை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பெட்ரோல் டாங்கிற்குள் இருந்த மலைப்பாம்ப்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.