தமிழகம்

கடலில் மூழ்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்கள்.! பரபரப்பு சம்பவம்.!

Summary:

கடலில் மூழ்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரம் சொகுசு கார்கள்.! பரபரப்பு சம்பவம்.!

ஜெர்மனி நாட்டில் இருந்து 4 ஆயிரத்திற்கும் அதிகமான சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்கா நோக்கி கடந்த மாதம் சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்தநிலையில், அட்லாண்டிக் கடலில் அசொரிஸ் தீவு பகுதி அருகே கடந்த 16-ம் தேதி சென்றபொது கப்பலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த கடற்படையினர் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், கப்பலில் சிக்கிய குழுவினர் 16 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், சரக்கு கப்பலில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது. 

இந்நிலையில், தீ பற்றிய சரக்கு கப்பல் தற்போது அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ளது. இதனால், சரக்கு கப்பலில் இருந்த 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ளன. ஆனால் சரக்கு கப்பலில் இருந்து இதுவரை எரிபொருள் கசிவு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement