தந்தை கண்முன் சுறா தாக்குதலில் 15 வயது சிறுவன் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!Shark attack Australia 15 years old teen died

 

ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு கடற்கரை பகுதிகளில் சமீபமாகவே சுறா தாக்குதலானது அதிகரித்து வருகிறது. கடற்கரையோரம் கடலில் இறங்கி குளிப்பவர்களை குறிவைத்து அலைகள் அதிகமாகும்போது சுறா தாக்குதல் நடக்கும்.

தனது வலையில் சிக்கும் மனிதர்களை கடலுக்குள் இழுத்துச்சென்று சாப்பிட்டு இறையாக்கி வருகின்றன. அதேபோல சுற்றுலாப் பயணிகளாக வரும் நபர்கள் வாடகைக்கு படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்று அலைகள் இல்லாத இடத்தில் நீச்சல் அடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Latest news

அப்போது சுறாக்கள் அங்கு வரும் பட்சத்தில் அதனால் ஒரு சில நேரம் சோகங்கள் நடக்கின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள இன்னஸ் தேசிய பூங்காவில் இருக்கும் ஏடெல் கடற்கரையில் சுறா தாக்குதலுக்குள்ளாகி 15 வயதுடைய காய் சவ்ளே என்ற சிறுவன் பலியாகி இருக்கிறார். சிறுவனின் தந்தை கண்முன்னே இந்த சோகம் நடந்துள்ளது.