எங்கள் திட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.! விரைவில் அழிக்கப்படும்.. ரஷ்ய அதிபர் புதின் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

எங்கள் திட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.! விரைவில் அழிக்கப்படும்.. ரஷ்ய அதிபர் புதின் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!


Russia president talk about war

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர்தொடுத்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தெற்கு பகுதி மட்டுமின்றி, கெர்சான் நகரத்தையும் ரஷ்ய படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. உக்ரைன் வசம் இருக்கும் தலைநகர் கீவ்வை பிடிக்க, ரஷ்ய படைகள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் என்னுடன் நேரடியாக அமர்ந்து பேசினால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், எந்த திட்டமும் இல்லாமல் இந்த போர் நடத்தப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்தை ஏற்க முடியாது. ரஷ்யா, திட்டமிட்டபடியே உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. விரைவில் மேற்குலக நாடுகள் உருவாக்கிய ரஷ்ய எதிர்ப்பு உக்ரைனில் இருந்து அழிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.