கொரோனவை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்ட நாட்டின் பிரதமருக்கே கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனவை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்ட நாட்டின் பிரதமருக்கே கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!


russia-pm-affected-corona

ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பாதித்து குணமடைந்த நிலையில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பித்த ஜனவரி மாத இறுதியிலேயே சர்வதேச எல்லைகளை மூடியதுடன், விமானப் போக்குவரத்தை ரத்து செய்தது ரஷ்யா அரசு.

russia

நாடுமுழுவதும்  பொது ஊரடங்கை  அறிவித்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக மேற்கொண்ட நாடாக ரஷ்யா திகழ்கிறது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமருக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும்  மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.  இதனால் உலகம் முழுவதும் கொரோனவை கட்டுப்படுத்துவதில் தடுமாறி வருகிறது.