3 ஆம் உலக போர் நியூக்ளியர் ஆயுதம், பேரழிவு - ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர்..! 



Russia Foreign Minster Lavrow Says 3 rd World War Nuclear Weapon

உக்ரைன் நாட்டினை சோவியத் ரஷியவுடன் இணைக்க ரஷியா முடிவெடுத்து, அந்நாட்டின் மீது 7 ஆவது நாளாக படையெடுத்து சென்று தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க கூடாது என ஒற்றை முடிவில் ரஷியா போர்தொடுத்து இருக்கிறது.

இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ், "மூன்றாம் உலக போர் என்பது நியூக்ளியர் ஆயுதத்தால் இருக்கும். அது மிகப்பெரிய பேரழிவை தரும்" என ரஷியாவின் ஸ்புட்னிக் ஊடகத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியா தனது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை இன்று கடல் பரப்பின் மேலே வரவழைத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

russia

உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் இணைத்துவிட்டால், அந்நாட்டை பாதுகாக்க நேட்டோ படைகள் களமிறங்கும். அதனுடன் உக்ரைனை காப்பாற்றுகிறோம் என அமெரிக்காவும் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் மண்ணில் போரிடும். இப்படியான சூழல் ஏற்படும் பட்சத்தில், தாமதம் இல்லாமல் நியூக்ளியர் ஆயுதத்தை வெளிக்கொண்டு வர ரஷியா திட்டமிட்டு இருப்பதாக தெரியவருகிறது. 

முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் விவகாரத்தில் வேறு நாடுகள் நேரடியாக போர்க்களத்திற்கு வந்தால் வரலாறில் பதிவு செய்யப்படாத பேரழிவை தருவேன் என பகிரங்கமாக எச்சரித்து இருந்து குறிப்பிடத்தக்கது. பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் எந்த ஒரு நாடும் பிற நாடுகளின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு மற்றொரு உதாரணமாக ரஷ்யா - உக்ரைன் போர் நடக்கிறது.