பள்ளி வளாகத்தில் துப்பாக்கிசூடு: 2 நண்பர்களை கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சிறுமி.!russia-bryansk-girl-shot-2-classmates-and-suicide-himse

 

ரஷியாவில் உள்ள Bryansk நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் 14 வயதுடைய சிறுமி பயின்று வருகிறார். சிறுமி இன்று காலை பள்ளிக்கு வருகை தந்துள்ளார். 

அவர் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், தனது வகுப்பறையில் உள்ள மாணவர்கள் மீது சரமாரி துப்பாக்கிசூடு நடத்திவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், காயமடைந்த பிற மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் 2 மாணவர்கள் துப்பாக்கிசூடு சம்பவத்தில் பலியானதும், ஐந்து பேர் காயமடைந்ததும் தெரியவந்தது. சிறுமியும் தற்கொலை செய்துகொண்டதால், துப்பாக்கிச்சூடுக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.