உலகம்

விமானத்தில் இருந்து பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் வீடியோ! விமானிக்கு மொத்தமும் பறிபோனது!

Summary:

punishment for pilot

எகிப்து நாட்டில் முகமது ரமதான் என்பவர் பிரபல நடிகர் ஆவார். இவர் 20-கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் சவுதி அரேபியாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனியார் விமானம் ஒன்றில் பயணித்துள்ளார்.

விமானத்தில் பயணித்தபோது நடிகர் முகமது ரமதான் விமானியின் அறைக்கு சென்று, பறக்கும் அந்த விமானத்தின் மொத்த கட்டுக்காட்டுகளையும் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.அவர் விமானியின் இருக்கையில் அமர்ந்து கொண்டே அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், வாழ்க்கையில் முதன் முறையாக விமானம் ஒன்றை செலுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் உடனடியாக எகிப்தின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் அந்த விமானியின் இந்த பொறுப்பற்ற செயலை வன்மையாக கண்டித்து அந்த விமானிக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதுடன், அந்த விமானத்தின் துணை விமானிக்கு ஓராண்டு தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.


Advertisement