துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கட்டிடங்கள் இடிந்து விழுந்தது...!

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கட்டிடங்கள் இடிந்து விழுந்தது...!


Powerful earthquake in Turkey... Buildings collapsed...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று காலை மத்திய துருக்கி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கின. மத்திய கிழக்கு துருக்கியின் சில மாகணங்களிலும் இதன் தாக்கம் இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 

துருக்கியின் காஜியண்டெப் பகுதியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் தரவுகள் கூறுகின்றன. கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் இருக்கும் பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

தியார்பாகிர், மலாத்யா மாகாணங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழப்புகள் தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் மற்றும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் லெபனான் மற்றும் சிரியா போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.