மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்ட்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு... பீதியில் மக்கள்...!

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்ட்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு... பீதியில் மக்கள்...!



powerful-earthquake-in-mexico-60-on-the-richter-scale-p

மெக்சிகோ நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் கோரல் பால்சோவில் இருந்து வடமேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நடுக்கம் எல்டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோநாட்டில் உள்ள கட்டிடங்கள் ஆட்டம் கண்டதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

mexico

மேலும் இந்த நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், மக்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு துறையினரும், மீட்பு படையினரும் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.