இளம் பெண்ணின் அழகில் மயங்கிய காவலர்.. கடமையை மீறி சாலை ஓரத்தில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..

இளம் பெண்ணின் அழகில் மயங்கிய காவலர்.. கடமையை மீறி சாலை ஓரத்தில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..


policeman-is-suspended-for-kissing-a-young-woman-instea

இளம் பெண் ஒருவரை காவலர் ஒருவர் ரோட்டில் வைத்து உதட்டு முத்தம் கொடுத்த நிலையில், அந்த காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும்நிலையில், பல நாடுகளில் இன்றுவரை ஊரடங்கு நடைமுறை அமலில் உள்ளது. அந்த வகையில் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கொரோனா ஊரடங்கு நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் லிமாவில் கொரோனா ஊரடங்கு கண்காணிப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரவு நேரத்தில் அழகிய இளம் பெண் ஒருவர் கொரோனா விதியை மீறி, சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்தவழியாக வந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர், அந்த பெண்ணை நோக்கி அருகில் சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணிற்கு அபராதம் விதிக்கும் விதமாக அதற்கான ரசீதை எழுத முற்சிக்கிறார்.

Crime

பின்னர் அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டு, சுற்றும் முற்றும் பார்க்கிறார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை சற்று ஓரமாக அழைத்துவந்து அந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துள்ளர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகி இருந்தநிலையில், அந்த காட்சி இணையத்தில் செம வைரலாக தொடங்கியது.

இதனை அடுத்து தனது பணியை செய்யாமல், இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த அந்த அதிகாரி தற்காலிகமாக பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.