உலகம்

பூங்காவில் சிங்கத்திற்கு உணவளிக்க சென்ற ஊழியர்!தனது வேலையை காண்பித்த சிங்கம்! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ.

Summary:

Pakisthan lion zoo

உயிரியல் பூங்கா ஒன்றில் சிங்கத்திற்கு உணவளிக்க சென்ற ஊழியரின் கையை கவ்விய சிங்கத்தின் கொடூர செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கராச்சி உயிரியல் பூங்கா ஒன்றில் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் கண்ணு பிராடிட்டா என்ற வெள்ளை நிற சிங்கத்திற்கு உணவளிக்க சென்றுள்ளார்.

அவர் அந்த சிங்கத்திற்கு பூனை இறைச்சியை உணவாக சிங்கத்தின் கூண்டிற்குள் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிங்கம் ஒன்று திடீரென அந்த ஊழியரின் கையை கவ்வி கொண்டது.

உடனே அந்த ஊழியர் கத்தியதை அடுத்து பூங்காவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் வந்த கூச்சலிட்டுள்ளனர். அவர்கள் போட்ட சத்தத்தில் சிங்கம் அந்த ஊழியரை விட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement