வாட்ஸ்அப்பில் முகமது நபி குறித்த அவதூறு.! பாகிஸ்தான் மாணவருக்கு மரண தண்டனை.!

வாட்ஸ்அப்பில் முகமது நபி குறித்த அவதூறு.! பாகிஸ்தான் மாணவருக்கு மரண தண்டனை.!



pakistan-regional-court-gave-death-penalty-to-a-student

இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபி மற்றும் அவரது மனைவிமார்களை பற்றி அவதூறு பரப்பிய குற்றத்திற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயது மாணவருக்கு அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது.

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்ததற்காக 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான 17 வயது மாணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பஞ்சாப் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Pakistanபாகிஸ்தான் நாட்டின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் சைபர் கிரைம் பிரிவிலிருந்து குறித்த இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதிகள் 22 வயது இளைஞர் முகமது நபி மற்றும் அவரது மனைவிமார்களை பற்றி இழிவான உள்ளடக்கம் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தயார் செய்து வாட்ஸ்அப்பில் பரப்பியதாக தெரிவித்துள்ளனர்.

Pakistanமரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு உறுதுணையாக இருந்ததாக 17 வயது மாணவர் ஒருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களும் தங்களது குற்றங்களை மறுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி அதிகாரிகள் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூன்று செல்போன்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக 22 வயது இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.