கொரோனா வைரஸ்க்கு சிகிச்சையளித்த செவிலியர்களின் முகத்திற்கு இப்படியொரு நிலைமையா? வைரலாகும் மனதை உருக்கும் புகைப்படங்கள்!

கொரோனா வைரஸ்க்கு சிகிச்சையளித்த செவிலியர்களின் முகத்திற்கு இப்படியொரு நிலைமையா? வைரலாகும் மனதை உருக்கும் புகைப்படங்கள்!



nurse-who-gave-treatment-for-coronovirus-took-out-mask

சீனாவில் வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 492 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 22000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா வைரஸால் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகளும்  கட்டப்பட்டுள்ளது.

Coronovirus

 இந்நிலையில் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் சிகிச்சையளித்து வருகின்றனர். அவர்களுக்கு சுவாசிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அவர்கள் 24 மணி நேரமும் முகமூடியை அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு தொடர்ந்து இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.