
இங்கிலாந்து நாட்டில் 8 பச்சிளம் குழந்தைகளை கொன்ற வழக்கில் கைதாகியுள்ள பெண் செவிலியர் மீது மேலும் 10 குழந்தைகளை கொல்ல செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 8 பச்சிளம் குழந்தைகளை கொன்ற வழக்கில் கைதாகியுள்ள பெண் செவிலியர் மீது மேலும் 10 குழந்தைகளை கொல்ல செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் செஷயர் பகுதியில் அமைந்துள்ள செஸ்டர் என்ற மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துவந்தவர் 30 வயதாகும் லூசி லெட்பை. இவர் வேலைபார்த்துவந்த மருத்துவமனையில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரையில் 15 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இந்த சமப்வம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தநிலையில் 2018 ஆண்டு லூசி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியேவந்தார். இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு லூசி மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இந்தமுறை 8 குழந்தைகளை கொன்றது மேலும் 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றது என லூசி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
தற்போது லூசி போலீஸ் காவலில் இருக்கும் நிலையில் அவர் செவிலியராக பணியாற்றியபோது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக அவர் மீது மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் குறிப்பிட்ட மருத்துவமனையில் மர்மமாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தற்போது போலீசில் புகார் செய்து உள்ளனர்.
Advertisement
Advertisement