
#Video: கபாலி + ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஏவுகணை சோதனை வீடியோ வெளியிட்ட வடகொரியா.. உலக நாடுகள் பதறல்...!
ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஏவுகணை சோதனை நடத்தியதை வடகொரிய இராணுவம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் வருடத்திற்கு பின்னர், வடகொரியா நீண்ட தூரம் செல்லும் வகையிலான அதிநவீன ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில், வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் பொருளாதார கடல் மண்டலத்தில் விழுந்ததாக ஜப்பான் அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா வரையில் சென்று தாக்கும் வல்லமை கொண்ட "ஹவாஸோங் 17" ஏவுகணை சோதனை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடைபெற்றது. வடகொரியாவின் செயலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், ஹாலிவுட் திரைப்பட பாணியில் அந்நாட்டு இராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், "அதிபர் கிம் ஜான் உன் கருப்பு நிற உடையணிந்து நடந்து வர, அவரின் பின்னால் ஏவுகணை இராணுவ வாகனத்தில் எடுப்பது வரப்படுகிறது. அதிபர் கைக்கடிகார உதவியுடன் கவுண்டவுன் சொல்ல, ஏவுகணை நெருப்பை கக்கியவாறு விண்ணில் செல்கிறது. இதனையடுத்து, அதிபரும் - இராணுவ வீரர்களும் சிரித்து மகிழ்கின்றனர்".
Advertisement
Advertisement