ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அம்பானி மருமகளுக்கு மாமியார் கொடுத்த வாய்பிளக்கவைக்கும் கிஃப்ட்.! போட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்.!
தங்களது குடும்பத்திற்கு வர போகும் மருமகள் ராதிகா மெர்சண்ட்டுக்கு அம்பானியின் மனைவி நீடா அம்பானி ரூ.640 கோடி மதிப்பில் ஒரு சொகுசு வில்லாவை பரிசாக கொடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்
பலரையும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் விஷயம் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்க்கும் எப்போது திருமணம் என்பது தான். ஏற்கனவே, ஜாம் நகரில் பிரம்மாண்டமான முறையில் 3 நாட்கள் ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடந்தது. இதில் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், உலக பணக்காரர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பென்ஸ் காருக்கு பிரசவம்; குழந்தையை பெற்றெடுத்த கார்; இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே.!!
சொகுசு கப்பலில் விருந்து
மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக வரும் ஜூலை 12ம் தேதி இரண்டாம் கட்ட கொண்டாட்டம் நடக்க உள்ளது. இதற்காக மே 28ல் இருந்து வேலைகள் துவங்குகின்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 800 விருந்தினர்களை கொண்ட ஒரு சொகுசு கப்பல் இத்தாலியில் இருந்து பிரான்ஸ் வரை செல்கிறது.
உல்லாச வில்லா
இந்த விருந்து நிகழ்வு எந்த அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், தனது மருமகள் ராதிகா மெர்சண்ட்க்கு அம்பானியின் மனைவி நீடா அம்பானி ஒரு சொகுசு வில்லாவை பரிசளித்து இருக்கிறார். துபாயில் இருக்கும் இந்த உல்லாச வில்லாவின் மதிப்பு ரூ.640 கோடி. இதில் 70 மீட்டர் தூரத்திற்கு ஒரு தனியார் கடற்கரை இடம் பிடித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதில் 10 ஆடம்பர படுக்கையறைகள் இருக்கிறதாம்.
வைரல் புகைப்படங்கள்
இதில் மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் இத்தாலி பளிங்கு கற்களை கொண்டு உட்புற வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும் விதமாக அமைத்துள்ளது. விடுமுறை காலங்களில் பார்ட்டிகள் நடத்தவும், பொழுதை கழிக்கவும் இந்த வில்லா உகந்ததாக இருக்கும். தனது மருமகளுக்காக அம்பானி குடும்பம் இதை பார்த்து பார்த்து வாங்கி இருக்கிறது, இதன் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மனித மலத்திற்கு இப்படி ஒரு மவுசா? ரூ 1.4 கோடி பணம் கொடுத்து மலம் வாங்குவதாக அறிவிப்பு.!