உலகம்

உலக நாடுகளே அதிர்ச்சி... எரிமலை வெடிப்பை தொடர்ந்து, சுனாமி தாக்கியது..!

Summary:

உலக நாடுகளே அதிர்ச்சி... எரிமலை வெடிப்பை தொடர்ந்து, சுனாமி தாக்கியது..!

நியூசிலாந்து நாட்டில் உள்ள டோங்கன் பகுதியில், நீருக்கடியில் குமுறிக்கொண்டு இருந்த எரிமலையானது நேற்று இரவு வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து, அங்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், டோங்கன் கடற்கரை பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்து சிதறியதால், 10 கி.மீ அளவுக்கு கரும்புகை சூழ்ந்துகொண்ட நிலையில், சுனாமி அலைகளும் கறைகளை தாக்கியுள்ளன.

சுனாமி அலைகள் உயரமாக எழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கடற்கரையில் இருந்து கடல் நீர் கடற்கரையோர பகுதிக்குள் புகுந்துகொண்டது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


Advertisement